மதுரை:

திருட்டை தடுக்கும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்  மதுரையைச் சேர்ந்த இளைஞர் பாண்டி.

சமீப காலமாக தமிழகத்தில் பல வீடுகளில் கொள்ளையர்கள் சாவகாசமாக வந்து கொள்ளை யடித்துச் செல்வது வழக்கமாகி உள்ளது. தொடர்ந்து பூட்டிய வீடுகளை கண்டறிந்து கொள்ளை யர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், அதை சட்டைச்செய்யாமல்  கொள்ளையடித்து சென்று விடுகின்றனர்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொள்ளை சம்பவங்களைத் தொடர்ந்து, அதை தடுப்பது குறித்து மதுரை இளைஞர் புதிய சாப்ட்வேர் ஒன்றை வடிவமைத்துஉள்ளார். இதன்மூலம் கொள்ளையை தடுக்க முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய மென்பொருள் வல்லுநரான பாண்டி மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி, தொலைக்காட்சிகளில் வந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மிகுந்த மனவருத்தம் அடைந்த தாகவும் இதற்கென ஒரு மென்பொருள் கருவியை கண்டுபிடித்தாக வேண்டும் என்ற எண்ணம் தனது கணவருக்கு தோன்றியதாக நாகலட்சுமி கூறினார்.

மேலும்,  இதற்கு பொருளாதார வசதி  தேவைப்பட்ட நிலையில், தனது கணவரின் ஆர்வம் காரணமாக அவரது  முயற்சிக்கு உதவியாக இருந்தேன் என்றும் கூறி உள்ளார்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள் உதவியுடன் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள சென்சார் மூலம், திருடர்கள் வீட்டிற்குள் நுழையவோ,  கதவை உடைக்கவோ, திறக்கவோ முற்பட்டால் பீப் அலாரம் ஒலிக்கும்.

அந்த சத்தத்தின் மூலமாக அருகாமையில் இருக்கக்கூடிய வீட்டில் உள்ளவர்களுக்கு கொள்ளை அடிக்கிறார்கள் என்ற சம்பவம் தெரியவரும்.

அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டின் உரிமையாளரின்  கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியோடு அவர்களுடைய எண்களுக்கும் அழைப்பு சென்றுவிடும் என்றார்.

குறுஞ்செய்தியை கவனிக்காத பட்சத்தில், அதன் மறுமதிப்பு தானாகவே அருகே உள்ள  காவல் நிலையத்திற்கு செல்லும் வகையில் மென்பொருள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து கூறிய பாண்டி,  மென்பொருள் பட்டதாரியான தான்,  கடந்த இரண்டு வருடங்களாக வேலையில்லாமல் இருந்த போது, இந்த மென்பொருளை உருவாக்கிய தாகவும் , இந்த மென்பொருள் சிஸ்டம் வீட்டில் உள்ளே சென்சாருடன் இணைக்கப்பட்டு 24மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

அதே வேளையில் வீடுகளில் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்கள், வீட்டின் மின் இணைப்பை துண்டித்தாலும் தொடர்ந்து  43மணி நேரம் செயல்படுகிற வகையில் மென்பொருள், சென்சார் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  வீட்டில் இருக்கக்கூடிய எந்த மூலையிலும் கதவினை உடைக்க முயற்சித்தாலும் பீப் ஓலி எழுப்பி திருட்டை தடுக்கும் என்றும் கூறினார்.

தான் தற்போது தயாரித்துள்ள இந்த மென்பொருள் மற்றும் அதற்கான கருவிகளுக்கு சுமார் 50ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாக தெரிவித்தவர், இதை மேலும் நவீன முறையில் உருவாக்க தனக்கு நிதி உதவி தேவை என்றும் கூறினார்.

திருடர்கள் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பாகவே இந்த சிஸ்டம் அமைப்பது  மூலம் திருட்டை தடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் பாண்டி.

பேட்டி: பொதிகை குமார்