ற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடித்த கடைசிபடம் ’தில் பெச்சாரா’ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் இடம் பெறும் ’ தாரே ஜின்’ என்ற பாடல், இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பாடல் வெளியானது. மெல்லிய இசையுடன் ரம்யமான காதல்பாடலாக உருவாகி இருக்கும் இப்பாடலே படத்தின் அழுத்தமான காதல் உணர்வை வெளிப்படுத்து கிறது.
பாடலின் வீடியோவின் தொடக்கத்தில், சுஷாந்த் ஒரு நடன விருந்துக்காக சஞ்சனாவை பைக்கில் அழைத்துச் செல்கிறார். உடல் நலமில்லாமல் ஆக்ஸிஜனை டியூப் வழியாக சுவாதித்தபடி காதலன் சுஷாந்த்துடன் செல்கிறார் சஞ்சனா. பார்டியில் இவர்களின் காதல் தென்றலாக தவழ்கிறது. சுஷாந்த், சஞ்சனாவின் கெமிஸ்ட்ரி வண்ணமயமாக கண்களில் பதிகிறது.இப்பாடல் மேலும் பல இதயங்களை உலுக்கும்.
தாரே ஜின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத் துள்ளார். மோஹித் சவுகான் மற்றும் ஸ்ரேயா கோஷல். பாடி உள்ளன. அமிதாப் பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.