“யோகி டா “:  உ.பி. முதல்வரை குறிப்பிடும் புதிய தமிழ்ப்படம்?

பாலி படத்தில் நடித்து பிரபலமான தன்ஷிகா நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இவர் நடிக்கும் புதிய படத்துக்கு “யோகி டா” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரிக்கும்  இந்தப் படத்தை கவுதம் கிருஷ்ணா இயக்குகிறார். ஏ.ஆர். ரகுமானின் சகோதிரி  இஷ்ராத் காதறி இசையமைக்கிறார்.

தன்ஷிகா – யோகி

வேதாளம், காஞ்சனா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வரும் கபீர் சிங் வில்லனாக நடிக்கிறார். மேலும், சாயாஜி ஷிண்டே, மனோ பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு: எஸ்.கே. பூபதி.  படத்தொகுப்பு: ஜி. சசி்குமார். சண்டைக்காட்சி: கணேஷ்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ட்விட்டரில் டிரெண்டாகியுள்ள நிலையில் படத்தின் பூஜை இன்று, (டிசம்பர் 10) காலை நடைபெற்று, படப்பிடிப்பும் துவங்கியது.

இந்த நிலையில்,  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை “யோகி” என்று பொதுவாக அனைவரும் குறிப்பிடும் நிலையில், “யோகி டா” என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ஆனால் படக்குழுவினர், “ரஜினி நடித்த கபாலி படத்தில் ‘யோகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தன்ஷிகா.  கிராப் தலை, கையில் துப்பாக்கி என்று அதிரடி வேடத்தில் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் கவர்ந்தவர். இந்த படத்திலும் அதே போல அதிரடி வேடத்தில் நடிக்கிறார். அதனால்தான் “யோகி டா” என்ற தலைப்பை வைத்தோம். மற்றபடி இதற்கும்  உ.பி. முதல்வருக்கும் தொடர்பு இல்லை” என்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: New Tamil film in the name of up Chief Minister Yogi
-=-