தொடர்ந்து எட்டு  நாட்களுக்கு வங்கி விடுமுறையா? : வைரலாகும் வாட்ஸ் அப் தகவல்கள்

சென்னை

ரும் 8 ஆம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என வாட்ஸ்அப் தகவல் தெரிவிக்கிறது.

வாட்ஸ் அப் மூலம் தற்போது வங்கிகள் எட்டு நாட்கள் தொடர்ந்து மூடப்படும் என்னும் தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த தகவலில்,

தயவுசெய்து கவனம் செலுத்துங்கள்

மார்ச் 8 முதல் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்

 8 மார்ச் ஞாயிறு

 மார்ச் 9 மற்றும் 10 தேதிகளில் ஹோலி விடுமுறை

 மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வங்கி வேலைநிறுத்தம்

 மார்ச் 14 அன்று இரண்டாவது சனிக்கிழமை

 மார்ச் 15 ஞாயிறு

 

 இந்த வழியில், அனைத்து வங்கிகளும் 8 நாட்களுக்கு மூடப்படும்

பொது நலனுக்காக வெளியிடப்பட்ட தகவல்கள்

எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எந்த வங்கி நிர்வாகமும் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை/

You may have missed