மாடர்னா இன்க்(Inc.) என்ற நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து, உலகின் பல இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், வேறுசில நிறுவனங்கள் முயற்சித்துவரும் கொரோனா தடுப்பு மருந்திற்கு மிக அதிக குளிர்நிலை தேவைப்படுகிறது. அதாவது, -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், எப்போதுமே அந்த மருந்து வைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய மிகக்குறைந்த வெப்பநிலை கொண்ட சரக்குப் போக்குவரத்து() அமைப்புகள் பல நாடுகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது மாடர்னா இன்க் என்ற நிறுவனம் மேம்படுத்தியுள்ள தடுப்பு மருந்துக்கு, அம்மாதிரியான பிரச்சினையில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இம்மருந்து நடைமுறைக்கு வந்தால், இதை மிக எளிதாக உலகின் பல பகுதிகளுக்குப் பெரியளவில் கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாடர்னா தடுப்பு மருந்து, -20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே, 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இம்மருந்தை வழக்கமான குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையிலேயே 30 நாட்கள் வரை வைத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.