சென்னை பல்கலை கழகத்துக்கு புதிய துணைவேந்தர்! அறிவிப்பாணை வெளியிட்டது தேடல் குழு

சென்னை:
சென்னை பல்கலை கழகத்துத்துக்கு  புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை  தேடல் குழு வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல்குழு தலைவராக  டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுநர் பன்வாரிலால் கடந்த மார்ச் மாதம் நியமித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. 
இந்த நிலையில்,  புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை தேடல் குழு வெளியிட்டுள்ளது. இதில்,  துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  www.unom.ac.in என்ற இணையதளத்தில் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
vcsearchcommittee.unom@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எனவும் அறிவித்துள்ளது.