ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”குடிநீர் பிரச்சினை இருப்பதை மறுக்க முடியாது. முக்கூடல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவேண்டிய நீர் வரவில்லை. இதற்கு மோட்டார் பம்ப்பை இயக்க முடியாமல் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினையே காரணம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அதிகாரிகளிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பிரச்சினை பெரியளவில் வெடிக்காத அளவுக்கு, முதல்வரிடம் ஆலோசனை பெற்று விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துள்ளதோடு, குடிநீர் வழக்கும் ஏரிகளும் அடியோடு வறண்டுக்கிடப்பதால், மாநிலத்தின் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.