ஆன்லைன் அணிகலன் ஏலம் – ஊரடங்கால் செல்வந்தர்களுக்கான புதிய வசதி!

சூரத்: கொரோனா ஊரடங்கு முடக்கத்தால், இந்திய அணிகலன் துறைக்கு ரூ.75000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஆன்லைன் ஏல முறையின் மூலம் பணக்கார இந்தியர்களுக்கு தாங்கள் விரும்பிய நகைகளை வாங்குவதற்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கார்டெயரின் டுட்டி ஃபுருட்டி என்ற நிறுவனத்தின் ஒரு ஆபரணம், ஆன்லைன் ஏலத்தின் மூலமாக 1.34 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால், இதன் எதிர்பார்க்கப்பட்ட விற்பனை விலை 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் முதல் 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரையே.

இந்த 2020ம் ஆண்டில் ஏலம் விடப்பட்ட ஆபரணங்களிலேயே இதுதான் அதிக விலைக்கு ஏலம் போன ஆபரணமாக கூறப்படுகிறது. ஏல நிறுவனத்தின் நகை நிபுணர் ஃபிராங்க் எவரெட் கூறியதாவது, “கர்டெயரின் டுட்டி ஃபுருட்டியின் நகை கலெக்ஷன்கள், நகைகளிலேயே புனித அழகாக கருதப்படுவதாகும்” என்றுள்ளார்.

கொரோனா பரவல் காலத்தில், ஏல நடவடிக்கைகளில் சமூக இடைவெளி என்ற ஒரு சிக்கல் இருப்பதால், ஏல முறை ஆன்லைனுக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.