புத்தாண்டு 2017 ராசிபலன்கள் (12 ராசிகளுக்கும்)

கணித்தவர்:  ஜோதிட பூஷணம்’  ரத்தன்குமார்

2016 முடிந்து 2017ல் காலடி எடுத்து வைக்க இருக்கிறோம். 2016 மக்களுக்கு கடும் சோதனை களையும், வேதனைகளையும் கொடுத்து, வரலாற்றில் நீங்கா இடம்பிடித்து விட்டு செல்கிறது.

அடுத்து வருவது 2017. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருப்போம்.

பத்திரிகை.காம் ஜோதிடம் வாயிலாக உங்களுக்கு ஒரு சில கிரக பலன்களை சொல்லுகிறது. நம்புவதும், நம்பாததும் உங்களது உரிமை. நம்பினார் கெடுவதில்லை.

ஜோதிடம் என்பது அடிப்படையில் ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலும் ஏராளமான விஷ யங்கள் கலந்தே உள்ளது. அவற்றை அறிவாலும் சிந்தனையாலும் அகற்றித்தான் அந்த நம்பிக்கையை நாம் சாதகமாகப் பயன்படுத்த முடியும். 

ஒவ்வொரு ராசிகாரர்களுக்கும் வரப்போகும் புத்தாண்டு என்னென்ன பலன்களை தரப்போகிறது என்பதை பார்க்கலாம்…..

பொதுப்பலன்

2017… இதன் கூட்டுத்தொகை 1. இந்த நம்பர் 1-ன் ஆட்சிக்கிரகம் சூரியன். இந்த எண்ணின் நாயகன் சூரியன்தான் கிரகங்களுக்குத் தலைமை தாங்குபவர், ஆத்மகாரகன் ஆவார்.

ஆகவே, இந்த ஆண்டில் பலருக்கு ஆத்ம ஞானம் கிடைக்கும். தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் உன்னத நிலையும் உண்டாகும். சுய மரியாதை கூடும். உடல் சக்தி பெருகும். நோய்நொடிகள் குறையும்.

இளம் வயதினரை காவு வாங்கிவரும இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து, மூலிகைகள் கண்டுபிடிக்கப்படும். மருத்துவர்களுக்கு செழிப்புக் கூடும்.

ஆட்சியில் இருப்போர்,  அரசாள்வோருக்கு நற்பெயர் கிடைக்கும். அரசியலில் நல்லதொரு மாற்றமும் உண்டாகும். 

நாட்டில் மக்கள் தேவைக்கேற்ப மின் உற்பத்திப் பெருகும், காடு, மலை, வனாந்தரங்கள் செழிக்கும். தகுதி உள்ளவர்களுக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும்.

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் ஜனவரி, அக்டோபர் மாதங்களில் பிறந்த வர்களுக்கும், சிம்ம ராசி, லக்னக்காரர்களுக்கும், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்தி ரக்காரர்களுக்கும் ஜாதகத்தில் சூரிய பலம் உள்ளவர்களுக்கும் இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும்.

சூரியன் பிதுர்க்காரகன் ஆவார். அவர்  உலகத்துக்கே தந்தை. சூரியன் ருத்திரனைக் குறிப்பவர். ஐந்து முகம் கொண்ட சிவபெருமான், ருத்திரனை வழிபடுவோருக்கு அதிக நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்.

ருத்திர ஜபம் செய்வது சிறப்பாகும். சிவாலயங்களுக்குச் சென்று சிவார்ச்சனை செய்வதன் மூலமும் சுப பலன்கள் பெறலாம்.  பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது பாவங்கள் போக்கும்.

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானையும், சிவகாமி அன்னையையும் வழிபடுவது விசேஷமாகும்.

கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோயிலுக்குச் செல்வதும் நல்லது.

இனி, 12 ராசிகளுக்கும் உரிய பலன்களை பார்க்கலாம்.

மேஷம்:  உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய்.11-ல் சுக்கிரன், கேது ஆகி யோருடன் கூடியிருப்பது சிறப்பு.ஆனால், இந்த ராசிக்காரர்களுக்கு குரு வும் சனியும் அனுகூலமாக இல்லை. ஜனவரி 26ந்தேதி சனி 9வது இடத்து க்கு  செல்கிறார். இது சற்றே ஆறுதல் தரக்கூடியது. பணப்பிரச்சினை குறைந்து, மனக்குழப்பங்கள் விலகும்.உடல்நலம் சீராகும்.

ஏப்ரல் 7 முதல் ஆகஸ்ட் 26 வரை சனி வக்கிரமாக உலவுவது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் நலனில் கவனம் தேவை. தொழிலில் பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 19 தேதி ராகு 4-வது இடம் மாறுகிறது. தொடர்ந்து கேது10வது இடம் மாறுவது சற்றே ஆறுதலை தரும்.

ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சாது தரிசனம் கிடைக்கும். செப்டம்பர் 11 முதல் குரு 7-வது இடம் மாறுவது விசேசமாகும்.

தடைகளும் குறுக்கீடுகளும் விலகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.திருமணம் ஆகாத வர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறம் ஆகும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் பயன்படும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். அக்டோபர் 25 முதல் சனி 9-வது இடம் மாறுவதால் தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 10-ல் செவ்வாய், கேது ஆகியோரும் உலவும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. புத்திசாலித்தனத்தா லும், செயல்திறமையாலும் சாதனை பல ஆற்றுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் தெளிவு உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறு வீர்கள். சனி மற்றும் ராகுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள்.

ஆகஸ்ட் 19 ம் முதல் ராகு 3-ஆமிடம் மாறுவது வரவேற்கத் தக்கது. வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும்.பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.செப்டம்பர் 11 முதல் குரு 6-ஆமிடம் மாறுவது குறை. உடல் நலனில் கவனம் தேவை.

பெற்றோருக்கும் மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். பொருளாதாரப் பிரச்னைகள் தலைதூக்கும். பெரிய வர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. மூத்த சகோதர, சகோதரிகளால் பிரச்னைகள் உருவாகும்.

தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல் படுவது நல்லது. மறைமுக எதிரிகள் இருப்பார்கள். எச்சரிக்கை தேவை. பொதுவில் செப்டம்பர் 10 வரை உள்ள காலம் மிகச் சிறப்பானதாக அமையும்.

மிதுனம்: புத்தாண்டின் ஆரம்பத்தில் சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது பலம் கூடியிருக்கிறது. திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் நிச்சயமாக கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடை யும். தொலைதூரப் பயணத்தின்போது விழிப்புடன் செயல்படுவது நல்லது.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 2வது இடத்துக்கும் கேது 8வது இடத்துக்கும் மாறு வது சிறப்பாகாது. குடும்பத்தில் பிரச்சினைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.

செப்டம்பர் 11 முதல் குரு பலம் பெறுவதால் பிரச்னைகள் விலகும். புத்திசாலித்தனம் பளிச்சி டும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். பொருளாதாரப் பிரச்னை கள் குறையும்.

அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். தனவந்தர்கள் உதவுவார்கள். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். வாழ்வில் சுபிட்சம் கூடும். பொன்னும் பொருளும் சேரும்.

கடகம்: புத்தாண்டின் ஆரம்பத்தில் செவ்வாய், குரு, சனி ஆகிய முக்கிய மான   கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படவே செய்யும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும். குடும்பத்தில் அமைதி குறையும்.பொருளாதாரநிலை சாதாரணமாகவே காணப்படும்.அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கு இடமிராது.

எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது.  அவசரப்போக்கு அடியோடு கூடாது. மக்களால் மன நிம்மதி கெடும். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.
ஆகஸ்ட் 19 முதல் ராகு உங்கள் ஜன்ம ராசிக்கும், கேது 7வது இடத்துக்கும் மாறுவது சிறப்பா னதாக இல்லை. செப்டம்பர் 11 முதல் குரு 4-வது இடம் மாறுவது ஓரளவு நலம் தரும். நல்ல வர்களின் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம்.

அக்டோபர் 25 முதல் சனி 6வது இடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். ஆன்மிகப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உழைப்புக்கும் திறமைக் கும் உரிய பயன் கிடைக்கும். வாழ்க்கைத்துணை நலம் பாதிக்கும்.

மொத்தத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய ஆண்டு இது. ஜாதக பலம் இருப்பவர்க ளுக்கு சோதனைகள் குறையும். இறை வழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் ஈடுபடுவதன் மூலம் நலம் பெறலாம்.

சிம்மம்: குருவின் சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. இதர கிரகங்கள் கோசா ரப்படி சிறப்பாக இல்லாவிட்டாலும் குரு பலம் உங்களைக் காக்கும். தெய்வானுக்கிரகம் ஏற்படும்.பெரியவர்களும் தனவந்தர்களும் உங்க ளுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களது ஆசிகளையும் பெறுவீர்கள். எதிர்ப்புக்கள் அடங்கிப் போகும். பிரச்னைகள் குறையும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.

ஜனவரி 26 முதல் சனி 5வது இடம் மாறுவது சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களின் முன்னேற்றம் மந்த கதி அடையும்.  அதிர்ஷ்டம் குறையும்.

ஆகஸ்ட்19 முதல் ராகு 12வது இடம் மாறுவதால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கேது 6-வது இடம் மாறுவது சிறப்பாகும். மனோபலம் கூடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் நலம் சீராகும். செப்டம்பர் 11 முதல் குரு 3-வது இடம் மாறுவதால் பணப் பிரச்னை ஏற்படும். தொழில் அதிபர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.

மார்பு, நுரையீரல், முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான பாதை புலப்படும். 

கன்னி: புத்தாண்டு ஆரம்பத்தில் செவ்வாய், சனி, கேது ஆகியோரது பலத்தால் அனுகூலம் உண்டாகும். மனத்தில் துணிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பக்தி மார்க்க கத்தில் நாட்டம் அதிகரிக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். ஜென்ம ராசியில் குரு இருப்பதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாது. விரும்பத்த காத இடமாற்றம் ஏற்படும். ஜனவரி 26 முதல் சனி 4-வது இடம் மாறுவதால் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கும்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 11-வது இடம் மாறுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத்தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். கடல் வாணிபத்தில் வளர்ச்சி காணலாம். கேது 5-வது இடம்மாறுவதால் மக்களால் பிரச்னைகள் சூழும். மறதி உண்டாகும். செப்டம்பர் 11 முதல் குரு 2-வது இடம் மாறுவது சிறப்பாகும்.பண நடமாட்டம் அதிகமாகும். பேச்சாற்றல் கூடும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கடன் தொல்லை குறையும். பிரச்னைகள் எளிதில் தீர வழிபிறக்கும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். அக்டோபர் 25 முதல் சனி 4-வது இடம் மாறுவதால் வீண் அலைச்சலும், உடல் அசைதியும் ஏற்படும்.சொத்து மூலம் வருவாய் கிடைத்தாலும் சில பிரச்னைகளும் உண்டாகும்.

துலாம்: புத்தாண்டில் ஆரம்பத்தில் குருவும் சனியும் செவ்வாயும் அனுகூல மாக இல்லை. மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.பண நெருக்கடி ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடு கள் முளைக்கும். தீய பழக்கங்களுக்கு இடம்தராமல் இருப்பது அவசிய மாகும். முக்கியமான பணிகளை ஒத்திப்போடுவது நல்லது.

ஜனவரி 26 முதல் சனி 3-வது இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடி வரும், திறமை வெளிப்படும். ஏப்ரல் 7 முதல் ஆகஸ்ட் 25 வரை சனி வக்கிரமாக உலவும் நிலை அமைவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 10-வது இடம் மாறுவதால் தொழிலில் நல்லதொரு மாற்றம் ஏற்ப டும்.கேது 4-வது இடம் மாறுவதால் சுகம் குறையும். தாய் நலனிலும் கவனம் தேவைப்படும்.

செப்டம்பர் 11 முதல் குரு ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. விரும்பத்தகாத இடமாற்ற மும் நிலைமாற்றமும் உண்டாகும். தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருளா தாரப் பிரச்னை உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள்.பிறரிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெறலாம். தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். அக்டோபர் 25 முதல் சனி 3-வது இடம்மாறுவதால் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். முயற்சி பலிதமாகும். குடும்ப நலம் சீராகும். உழைப்பு வீண்போகாது.

விருச்சிகம்: புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். தெய்வ பலம் உங்களுக்கு உற்றதுணை யாக இருக்கும். குரு அருளும் துணைபுரியும். பொருளாதார நிலை உய ரும். குடும்ப நலம் சிறக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிடைக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் வரு வாய்  கிடைத்துவரும். மந்திரம், தந்திரம், யந்திரம் இவற்றில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறு வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பலம் குறைந்திருப்பதால் சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆகஸ்ட் 19 முதல் ராகு 9-வது இடம்மாறுவது சிறப்பாகாது. கேது 3-வது இடம் மாறுவதால் மன உறுதி கூடும்.

பக்தி மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும்.செப்டம்பர் 11 முதல் குரு 12-வது இடம் மாறுவதால் குடும்ப நலம் பாதிக்கும். பண நடமாட்டம் குறையும். மக்களால் மன அமைதி கெடும்.

குழந்தைகளை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்கலாகாது.

தனுசு: உங்கள் ராசிக்கு 10-ல் குருவும், 12-ல் சனியும் உலவுவது சிறப்பா காது. விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். குடும்ப நலனில் அக்கறை தேவைப்படும். பொருள் வரவு குறைந்து, செலவுகளும் இழப்புக்களும் கூடும். கைப்பொருளைப் பத்திரப்படுத்து வைத்துக் கொள்வது அவசியமாகும். கண், கால் சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படும்.

மக்களாலும், வேலையாட்களாலும் பிரச்னைகள் சூழும். சகோதர, சகோ தரிகளால் சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 8-வது இடத்துக்கும், கேது 2-வது இடத்துக்கும் இடம் மாறுவது அவ்வளவு விசேஷமல்ல.  விஷ பயம் ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். வீண்வம்பு கூடாது.

செப்டம்பர் 11 முதல் குரு லாப ஸ்தானத்துக்கு மாறுவது ஓரளவு நன்மை பயக்கும். எண்ணிய எண்ணம் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். தாயாராலும், மக்களாலும் அனுகூலம் உண்டாகும்.

நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் விலகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். இந்த ஆண்டு முழுவதும் சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து வருவது நல்லது.

மகரம்: புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு, சனி ஆகியோரது சஞ்சாரம் சாதக மாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை திருப்தி கரமாக இருந்துவரும். தொலைதூரத்தொடர்பு பயன்படும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். தான, தர்ம பணிகளில் நாட்டம் கூடும். பிறர் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். உத்தியோ கஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். உயர் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும்.சாதுக்கள், மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

ஜனவரி 26 முதல் ஏப்ரல் 7 வரையிலும் சனி 12-வது இடத்தில் உலவும் நிலை அமைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.இடமாற்றம் உண்டாகும். ஜூன் 21 முதல் அக்டோபர் 25 வரை உள்ள காலத்தில் சனி அனுகூலமாக இருப்பதால் திறமைக்குரிய பயன் கிடைக்கும். ஆகஸ்ட் 19 முதல் ராகு 7வது இடத்துக்கும், கேது ஜன்ம ராசிக்கும் இடம் மாறுவது சிறப்பாகாது.

இந்த ஆண்டு முழுவதுமே நாகரை வழிபடுவது அவசியமாகும். செப்டம்பர் 11 முதல் குரு 10-ஆமிடம் மாறுவது குறை. தொழிலில் மாற்றம் உண்டாகும். சகோதர நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. அக்டோபர் 25 முதல் சனி 12வது இடத்துக்கு மாறுவதால் விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை.

கும்பம்: இந்தப் புத்தாண்டு முழுவதும் சனி அனுகூலமாக உலவுகிறார். இதனால் உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். மதிப்பும் அந்தஸ் தும் உயரும். குரு பலம் இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப் போது ஏற்படும். பணப் பிரச்னை ஏற்படும்.குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிவரும். தொழில் அதிபர்களுக்குச் சோதனைகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. சுப காரியங்கள் நிகழ ஜாதக பலம் தேவை.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 6-வது இடம் மாறுவது சிறப்பாகும். கடல் வாணிபம் லாபம் தரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கேது 12-வது இடம் மாறுவது சிறப்பாகாது. செப்டம்பர் 11 முதல் குரு 9-வது இடம்மாறுவது வரவேற்கத்தக்கது. உடல் ஆரோக்கியம் சீராகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். தடை, தாமதம் ஆன சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும்.

பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அக்டோபர் 25 முதல் சனி 11-வது இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நீண்ட கால எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

மீனம்: புத்தாண்டின் ஆரம்பத்தில் குரு வலுத்திருக்கிறார். அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் 3, 11-ஆம் இடங்களையும் பார்க்கிறார். இதனால் உங்கள் மதிப்பு உயரும்.பிறரால் போற்றப்படுவீர்கள். உடல்நலம் சீராகவே இருந்துவரும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

உடன் பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் நலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடி வரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்வாழ்வு இனிக்கும். முயற்சி வீண் போகாது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

ஆகஸ்ட் 19 முதல் ராகு 5-வது இடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை. குறுக்கு வழிகளில் செல்லலாகாது. கேது 11-வது இடம் மாறுவதால் ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். சாது தரிசனம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

செப்டம்பர் 11 முதல் குரு 8-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செய்து வரும் தொழில் எதுவா னாலும் அதில் முழு அக்கறை தேவை. சிறு தவறு செய்தாலும் பெரிய தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். சகோதர நலனில் கவனம் தேவை. மக்களால் மன அமைதி கெடும். வருட பின்பகுதியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.