புத்தாண்டு, பொங்கல் சிறப்பு ரயில் விவரம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் பொங்கல், புத்தாண்டுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக  இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் குறித்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி,  பொங்கல், புத்தாண்டு பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 1 மற்றும் 15-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது. 

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே, டிசம்பர் 31 முதல் பிப்ரவரி 25 வரை அனைத்து திங்கள்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில், ஜனவரி 8 முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 2 மற்றும் 16-ம் தேதிகளில் சுவிதா ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ஜனவரி ஒன்று முதல் பிப்ரவரி 26 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் சிறப்பு கட்டண ரயில் புறப்படும்.  மறுமார்க்கத்தில், ஜனவரி 9 முதல் பிப்ரவரி 27 வரை அனைத்து புதன்கிழமைகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 4, 11, 12, 18 25, பிப்ரவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில், ஜனவரி 3, 6, 10, 15, 16, 27 பிப்ரவரி 17, 24 ஆகிய நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CHENNAI EGMORE, New Year, pongal, southern railway, Special train, SUVIDHA SPECIAL, Tirunelveli, சிறப்பு ரயில், சென்னை, திருநெல்வேலி, தென்னக ரயில்வே, நாகர்கோவில், புத்தாண்டு, பொங்கல்
-=-