சென்னை:

ன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதையொட்டி, சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை இரவு 1 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இன்று நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’  பிறக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களி லும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் இன்று நள்ளிரவு அதிக அளவில் கூடுவார்கள். இதையொட்டி, சென்னையில் முக்கிய இடங்களில் இன்று இரவு 9 மணி முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

‘மெட்ரோ’ நேரம் நீட்டிப்பு

இந்த நிலையில், சென்னை மக்கள் வசதிக்காக  மெட்ரோ ரயில்  இன்று (31-ம் தேதி) இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 28 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  போலீஸார் உஷார்நிலையில் இருந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.