புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறையினரின் கட்டுப்பாடு விவரங்கள்

சென்னை:

2019ம் ஆண்டு பிறப்பதையொட்டி, 31ந்தேதி நள்ளிரவு நடைபெறும் கேளிக்கைகளுக்கு தமிழக காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னையில் நட்சத்திர விடுதிகளிலும்  நள்ளிரவு 1 மணி வரை  மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி என்றும் அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. அதன் காரணமாக வரும் திங்கட்கிழமை நள்ளிரவு புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆட்டம், பாட்டம்,  கொண்டாட்டம், குத்தாட்டம் என கேளிக்கை நிகழ்ச்சிகளும் களை கட்டும்.

கடற்கரை, பூங்காக்கள், கோவில்களில், சாலையோரங்களில் மக்கள் புத்தாண்டை அவரவர்களுக்கு பிடித்த விதமாக கொண்டாடி மகிழ்வர். அந்த சமயத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்து உள்ளனர். அதன்படி,

டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1 ம் தேதி நள்ளிரவு 1 மணி வரை மட்டும் புத்தாண்டு கொண்டாட அனுமதி

நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட அனுமதி

நள்ளிரவு 1 மணிக்கு மேல் மதுபாங்கள் விற்கத்தடை

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பெண் காவலர்கள் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வைக்க சிறப்பு ஏற்பாடு

நட்சத்திர விடுதிகளில் மது அருந்திவிட்டு செல்வோர் பத்திரமாக வீடுகளுக்கு செல்வதற்கு தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் முன்வர வேண்டும்

நீச்சல் குளங்கள் அருகில் மேடை அமைக்கதடை

நட்சத்திர ஹோட்டல்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட வேண்டும்

நட்சத்திர விடுதிகளில் வாகனங்கள் இல்லையென்றால், காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்

இந்த கட்டுபாடுகளை, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.