புத்தாண்டு: நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை!

சென்னை,

மிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாக கோர்ட்டு பதிவாளர் தெரிவித்து உள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட் மதுரை கிளை உள்பட அனைத்து கோர்ட்டுகளுக்கும்  வரும் 23-ம் தேதியிலிருந்து, ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐகோர்ட் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாளை 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை விடப்படுகிறது,

28-ம் தேதியில் விடுமுறைக்கால வழக்குகளை சென்னையில் 4 நீதிபதிகளும், மதுரையில் 2 நீதிபதிகளும் விசாரிப்பார்கள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.