திருமலை:

ங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறப்பதையொட்டி, இன்றும், நாளையும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்புதரிசனங்கள் ரத்த செய்யப்பட்டு உள்ளதாகவும், அனைத்து ஆர்ஜித சேவைகள் முழுவதும் ரத்து செய்வதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து கூறிய தேவஸ்தான அதிகாரி,  ‘ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி மாதம் 6, 7 ஆகிய நாட்களில் வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாளன்று, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் சிறப்பு தரிசன நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  வைகுண்ட ஏகாதசி, துவாதசிக்கும் தர்ம தரிசன டோக்கன், திவ்ய தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும்.  சாமானிய பக்தர்கள் காலை 5 மணிக்கு பின்னர் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

வைகுண்ட ஏகாதசியை யொட்டி, 5-ம் தேதி 24 மணி நேரமும் மலைப்பாதை திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மலைப்பாதை உட்பட பல இடங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.