இந்தோனேசியாவில் புத்தாண்டை திருமணம் செய்து வரவேற்ற இளஞ்ஜோடிகள்!

ஜகார்த்தா: 

ந்தோனேசியாவில் 450 ஜோடிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து புத்தாண்டை வரவேற்றனர். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் 2018ம் ஆண்டை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர். புத்தாண்டையொட்டி  பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு நாடுகளல் வாண வேடிக்கைகள் களைகட்டி இருந்தன.

இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நள்ளிரவில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்ற மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது திருமணம் செய்துகொண்ட இளஞ்ஜோடிகள் கூறும்போது,  எங்கள் திருமணத்தை எளிதில் மறக்க முடியாத விதமாக நடத்த முடிவு செய்தோம். அதற்காகவே அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்டோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த மெகா திருமண நிகழ்ச்சி உலகம் முழுவரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.