கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெயரை, பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ‘கோல்மால் அகைன்’ திரைப்படம் பெற்றுள்ளது.

நியூஸிலாந்து நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அங்கு திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 2017-ம் ஆண்டு வெளியான ‘கோல்மால் அகைன்’ படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/CBzYWcZhLTI/

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் ரோஹித் ஷெட்டி, ” ‘கோல்மால் அகைன்’ படத்தை நியூஸிலாந்தில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனால் கோவிட்டுக்குப் பிறகு வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. நியூஸிலாந்தில் கரோனா தொற்று இல்லை. ஜூன் 25-ம் தேதி அன்று ‘கோல்மால் அகைன்’ திரைப்படத்துடன் அரங்குகள் திறக்கப்படுகின்றன. ‘என்ன நடந்தாலும், ஆட்டம் தொடர வேண்டும்’ என்று சொன்னது சரிதான்” என்று பகிர்ந்துள்ளார்.