கேன்பரா:

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார்.


இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மசூதிகளில் நடந்த தாக்குதலை கண்டிக்கின்றோம். நியூசிலாந்தின் தெற்கில் அமைந்துள்ள கிறிஸ்த்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் நுழைவது ஆஸ்திரேலிய தீவிரவாதிதான்.

இது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நியூசிலாந்து மக்களும் நாங்களும் நட்பு நாடுகள் மட்டுமல்ல. நாங்கள் ஒரே குடும்பம்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை நியூசிலாந்து போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.

இது போன்ற சோகமான நிகழ்வும், பேயை நினைவுபடுத்தும் இத்தகையோரும் எப்போதும் நம் கண் முன்னே வந்துவிடக் கூடாது” என்றார்.