முதல் குழந்தையை பெற உள்ள நியூஜிலாந்து பெண் பிரதமர்

க்லாந்து,  நியுஜிலாந்து

நியுஜிலாந்து நாட்டு பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தனது முதல் குழந்தையை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நியுஜிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக ஆர்டர்ன் பதவி ஏற்றார்.   இந்த வருடம் ஜனவரி மாதம் தாம் கருவுற்றுள்ளதாக தெரிவித்தார்.    ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் இதை ஆர்டர்ன் தெரிவித்ததும் அவருக்கு மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவியத் தொடங்கின.

பதவியில் இருக்கும் போது பெண் பிரதமர் கர்ப்பம் ஆவது நியுஜிலாந்தில் முதல் முறை ஆகும்.   அதைத் தொடர்ந்து பத்திரிகைகளில் ஆர்டர்ன் உடல்நிலை குறித்த செய்திகளை மக்கள் ஆவலுடன் படிக்க தொடங்கினர்.   அவர் தனது மக்கட்பேறுக்காக ஆறு வாரம் விடுமுறையில் செல்கிறார்.   அந்த நேரத்தில் துணைப் பிரதமர்  வின்ஸ்டன் பீட்டர்ஸ் தற்காலிக பிரதமராக பணி புரிய உள்ளார்.

இன்று காலை நியுஜிலாந்து நேரப்படி 5.50 மணிக்கு ஆக்லாந்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனை ஒன்றில் ஆர்டர்ன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருடன் கணவர் கிளார்க் கேஃபோர்ட் உடன் இருக்கிறார்.    அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை இன்னும் தகவல் அளிக்கவில்லை.   மருத்துவமனையை சுற்றி செய்தியாளர்கள் முற்றுகை இட்டுள்ளதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.