நியுஜிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது

 

க்லாந்து

நியூஜிலாந்து பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் தனது முதல் பெண் குழந்தையை இன்று பெற்றெடுத்தார்.

நியுஜிலாந்து  பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டர்ன் நியுஜிலாந்து நேரப்படி இன்று காலை 5.50க்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   நியுஜிலாந்து நட்டின் மூன்றாம் பெண் பிரதமரான இவர் கடந்த வருடம் பதவி ஏற்றார்.  37 வயதான ஆர்டர்ன் தாம் கருவுற்றிருப்பதை இந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் அறிவித்தார்.   அவரும் அவர் கணவர் கிளார்க் கேபோர்ட் மட்டுமின்றி நியூஜிலாந்து நாடே அவர் மகப்பேற்றை ஆவலுடன் எதிர்நோக்கியது

.

தற்போது நியுஜிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தற்காலிக பிரதமராக பொறுப்பில் உள்ளார்.  ஆர்டர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதும் அவர், “இது ஒரு மகிழ்ச்சிகரமான நாளாகும்.   இந்த அரசு மட்டுமின்றி நாடே ஆர்டர்னின் குழந்தைக்காக ஆவலுடன் காத்திருகிறது.” என தெரிவித்தார்.

நியுஜிலாந்து நேரப்படி இன்று மாலை 4.45 மணிக்கு ஆர்டர்ன் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.  குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் 3.31 கிலோ எடையுடன் உள்ளதகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   அவரும் அவர் கணவர் கிளார்க் கேலார்டும் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

வரும் ஞாயிறு அன்று இவருக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் அறிவித்திருந்ததால் கடந்த சில நாட்களாகவே இவர் மகப்பேறு குறித்த செய்திக்காக மக்கள் காத்திருந்தனர்.    உலக வரலாற்றில் ஒரு பெண் பிரதமர் பதவியில் இருக்கும்  போது குழந்தை பெறுவது இரண்டாம் முறையாகும்.   இதற்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 1990 ஆ,ம் வருடம் பதவியில் இருக்கும் போது குழந்தை பெற்றார்.