வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 2வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவி ஏற்றுக் கொண்டார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அக்டோபர் 17ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது.

மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களை அவரது கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வெலிங்டனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக் கொண்டார்.

அவருடன் அவரது அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். அப்போது பேசிய ஜெசிந்தா, எந்த நெருக்கடியான நேரத்திலும், மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போல, நாட்டிற்கு சேவை செய்வதில் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று  தெரிவித்தார்.