நியூசிலாந்து: கர்ப்பிணி மாணவி கொலை! இந்திய மாணவனுக்கு 17ஆண்டு சிறை!

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொலை செய்த இந்திய மாணவனுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நியூசிலாந்து நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ். வயது 24. குர்பிரீத். வயது 22. இவர்கள் இருவரும் நியூசிலாந்தில உள்ள ஆக்லாந்தில் ஸ்டுடன்ட் விசாவில் தங்கி படித்து வந்தனர்.

student

இருவரும் ஒரே இடத்தில் தங்கி படித்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் உண்டாகியது. சுமார் ஒரு வருடம் இருவரும் சேர்ந்தே இருந்துள்ளனர்.  இதன் காரணமாக குர்பீரித் கர்ப்பமானார்.

ஆனால் குர்பிரீத் கர்ப்பத்திற்கு தான் காரணமாக அல்ல என்று ஆகாஷ் கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இதுகுறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்டமோதல் உச்சகட்டத்தை அடைந்து.  இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், குர்பிரீத்தை  29 முறை கத்தியால் குத்தி கொலை செய்து, குர்பிரீத் பிணத்தை ஆக்லாந்தில் ஒதுக்குப்புறத்தில் உள்ள புதரில் வீசிவிட்டார்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முதலில் குற்றத்தை ஒப்புகொள்ள மறுத்த ஆகாஷ், பின்னர் கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

இதையடுத்து, ஆக்லாந்து நீதிமன்றம் ஆகாஷூக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கொலை செய்யும்போது குர்பிரீத் 7முதல் 10 வார கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி