கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.

நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154 பேர் பாதிக்கப்பட, 22 பேர் உயிரிழந்தனர். 1,482 பேர் குணமடைந்தனர். ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 வாரங்கள் கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 17 நாட்களில் புதியதாக கொரோனா பாதிப்புகள் எதுவும் அந்நாட்டில் பதிவாகவில்லை. கொரோனா வைரசுக்காக கடைசியாக அனுமதிக்கப்பட்ட நபர் இப்போது அறிகுறியில்லாமல் உள்ளார். எனவே அவர் தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவர் முழு குணமடைந்தவராக கருதப்படுகிறார் என்று அந்நாட்டின் சுகாதார இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கொரோனா தொற்று அல்லாத நாடாக நியூசிலாந்து மாறி உள்ளது.