தனது பிரசவத்துக்காக சைக்கிளில் சென்ற பெண் அமைச்சர்! எங்கே தெரியுமா?

வெல்லிங்டன்:

னது பிரசவத்துக்காக சைக்கிளில் மருத்துவமனை சென்றுள்ளார் கர்ப்பிணியான  ஜூலி அன்னி ஜென்ட்டர்  என்ற  பெண் அமைச்சர். இவர் நியூசிலாந்து நாட்டு அமைச்சரவையில், பெண்கள் நலத்துறை அமைச்சராக உள்ளார்.  இந்த சம்பவம் உலகம் முழுவதும் டிரென்டிங்காகி உள்ளது.

கர்ப்பிணியான  நியூசிலாந்து நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜூலி அன்னி ஜென்ட்டர், தனது பிரசவ நேரம் நெருங்கியதை தொடர்ந்து,  தனது பிரசவத்துக்கு சைக்கிளில் மருத்துவமனை சென்றுள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நியூசிலாந்து நாட்டின் பெண் அமைச்சர் ஜூலி அன்னி ஜென்ட்டர்

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜூலி ஜென்ட்டர், தனது கர்ப்பணம் தரித்து 42 வாரங்கள் கடந்து விட்டதால், பிரசவத்திற்கான நேரம் நெருங்கியது. இதன் காரணமாக, தான் சைக்கிளில் மருத்துவ மனைக்கு சென்றதாக கூறி உள்ளார்.

ஜூலி ஜென்ட்டர். நியூசிலாந்து நாட்டின் சமூக நலத்துறை மற்றும்,  போக்குவரத்துதுறை  இணை அமைச்சராகவும்  இருந்து வருகிறார்.

சுற்றுச் சூழல் பாதிப்பற்ற போக்குவர்த்துக்கான திட்டங்களையும் அதற்கான விழிப்புணர்வுகளை யும் ஏற்படுத்தி வரும், ஜூலை, சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆக்லாந்து சிட்டி மருத்துவ மனைக்கு சைக்கிளில் சென்றது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.

இந்த தகவல்களை ஜூலி  சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

ஏற்கனவே   நியூசிலாது நாட்டின் பிரதமர் ஜசிந்தா அர்டெர்ன், பதவியில் இருக்கும் போதே கடந்த ஜூன் மாதம், குழந்தையை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.