நியூசிலாந்தில்  துப்பாக்கிச் சட்ட திருத்தம் நிறைவேறியது: தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து நடவடிக்கை

வெலிங்டன்:

நியூசிலாந்து மசூதிகளில் தீவிவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆன நிலையில், துப்பாக்கி பயன்படுத்தும் சட்டத்தை மாற்றியமைக்கும் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.


நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் 15-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.

இந்நிலையில், ராணுவத்தில் பயன்படுத்தும் தானியங்கி துப்பாக்கிகளை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானத்தை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டென் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தன. இதனையடுத்து நியூசிலாந்து கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்ததும், வெள்ளிக்கிழமை முதல் புதிய சட்டம் அமலுக்கு வரும்.