யானை மீதிருந்து தவறி விழுந்த அசாம் துணை சபாநாயகர்! பரபரப்பு (வீடியோ)

திஸ்பூர்:

சாம் மாநில துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள  கிரிபாநாத் மல்லா, யானை மீதிருந்து கீழே விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சர்பானந்தா  சோனோவால் இருந்து வருகிறார். மாநில சட்டமன்ற துணைசபாநாயகராக  பாஜகவைச் சேர்ந்த கிரிபாநாத் மல்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, கிரிபாநாத் தனது  சொந்த தொகுதியான ராதாபரி சென்ற போது அவரது ஆதரவாளர்கள், அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர். அதன் காரணமாக கிரிபாநாத்தை   யானை மீது அமர வைத்தனர். அப்போது யானை திடீரென உடலை குலுக்கியதால், கிரிபாநாத் மல்லா யானை மீதிருந்து கீழே விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தின்போது, கிரிநாத்  யானையின் பக்கவாட்டில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக  பரவி வருகிறது.

நன்றி: ANI

வீடியோவை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…..