பெங்களூர் துணைமேயர் ரமீலா உமாசங்கர் மாரடைப்பால் மரணம்: முதல்வர் குமாரசாமி இரங்கல்

பெங்களூர்:

மீபத்தில் நடைபெற்ற பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று துணைமேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வர் ரமீலா உமாசங்கர், மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைக்கு முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

44 வயதே ஆன ரமீலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவர்  மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்.

கடந்த மாதம் (செப்டம்பர்) 28ந்தேதி நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தல் மேயர் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கங்காம்பிகேவும், துணை மேயர் தேர்தலில் போட்டியிட்ட  மஜத வேட்பாளர் ரமீலாவும் வெற்றிபெற்று பதவி ஏற்றனர்.

பெங்களூரு மாநகராட்சி வரலாற்றில் மேயர், துணைமேயர் பதவிகளை பெண்களே 2வது முறையாக வகிதது வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ரமீலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் உடடினயாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் மரணமடைந்தார். இது மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரமீலா உமாசங்கர் மறைவுக்கு முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அதில், அவரது குடும்பத்தினருக்கு என் இதயப்பூர்வமான இரங்கல். அவளுடைய ஆத்துமா சமாதானமாக இருக்கலாம். இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ள குடும்பத்திற்கு தைரியமும் வலிமையும் கொடுக்க ஜெபம் செய்யுங்கள்.. என்று கூறி உள்ளார்.

பெங்களூர் மேயர் கங்காம்பிகே தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ரமீலாவின் மரண செய்தி தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும்,  அவரது மறைவுக்க அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மாநகராட்சி அலுவலங்கள் மூடப்படும் என்றும் கூறி உள்ளார்.

மறைந்த ரமீலா உமாசங்கர் பெங்களூரின்  காவேரிபுரா வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது 44 வயதே நிரம்பிய ரமீலாவுக்கு உமாசங்கர் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.