வைரல் ட்ரெண்டான ‘காஷ்மோரா’ டிரைலர்!

kashmora-official-trailer

‘தோழா’ படத்திற்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் ‘காஷ்மோரா’. இதனை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் கோகுல் இயக்கி வருகிறார்.

இதில் காஷ்மோரா, ராஜ்நாயக் மற்றும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் ஒரு கேரக்டர் என 3 வித்தியாசமான ரோல்களில் கார்த்தி நம்மை அசத்தவிருக்கிறாராம். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகிய இருவரும் கார்த்தியுடன் டூயட் பாடி ஆடியுள்ளனர். இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். சமீபத்தில், ட்விட்டப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டியது.

இந்நிலையில், படத்தின் ஆடியோ & டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ‘காஷ்மோரா’வின் டிரைலரை 11 லட்சத்திற்கும் மேல் யூ-டியூபில் பார்வையிட்டுள்ளனர். படத்தை வருகிற தீபாவளி ரேஸில் களமிறக்கவுள்ளது ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ நிறுவனம்.