பீஜிங்

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள்  புகுந்ததாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வன விலங்குகள் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.   இந்த வைரஸ் வவ்வால் மூலம் மக்களிடையே பரவியதாகத் தகவல்கள் தெரிவித்தன.   அத்துடன் இதற்குச் சீனர்கள் உணவுப் பழக்கத்தைப் பலரும் குறை கூறினார்கள்.

எறும்புத் தின்னி சீனாவில் உணவு மற்றும் மருந்துக்காகப் பயன்படுத்தப் படுகிறது.  எறும்புத் தின்னிகள் சீனாவில் மிகவும் குறைவாக உள்ளதால் அவைகளைச் சட்டவிரோதமாகக் கடத்தி  கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.   இதனால் சீனாவில் எறும்புத் தின்னிக்கு நல்ல கிராக்கி உள்ளது

இந்நிலையில் ஒரு ஆய்வறிக்கையின்படி இந்த வைரஸ் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் கடத்தி எடுத்து வரப்பட்ட எறும்புத் தின்னி மூலம் சீனாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மை என்பது சரிவரத் தெரியவில்லை.  உலகெங்கும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள எறும்புத் தின்னிகள் ஆசிய நாடுகளில் மட்டும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.