Random image

‘நியூஸ் ஜெ:’ அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி தொடங்கியது

சென்னை:

திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் இன்று உதயமானது. ‘நியூஸ் ஜெ’ என்று பெயரிடப் பட்டுள்ள தொலைக்காட்சி சேனலின் ஒளிரபரப்பு மற்றும் லோகோவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுகவின் ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் போன்றவை சசிகலா குடுப்த்தினரின் கைகளுக்கு சென்றது. இதன் காரணமாக  அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி தொடங்க எடப்பாடி தலைமையிலான அதிமுக முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து எற்கனவே நமது அம்மா நாளிதழ் தொடங்கப்பட்ட நிலையில்,  ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி சேனல் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து  வைத்தனர்.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும்,  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கணைப்பாளரும் துணை முதலமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ‘நியூஸ் ஜெ’ சேனலின் லோகோ, மொபைல் செயலி மற்றும் இணையதளம் ஆகியவற்றையும்  தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.