கமல்-கெளதம் மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறதா…?

சமீபத்தில் வெளியான ஜிப்ஸி படக்குழுவை அழைத்து கமல்ஹாஸன் பாராட்டினார் .அப்போது இயக்குனர் கவுதம் மேனனும் உடன் இருந்தார்.

இதனால் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்காகத் தான் அவர்கள் மீண்டும் இணையவுள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கமலின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேவர் மகன் 2 படத்தை ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார் கமல்.

அது மட்டுமின்றி அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இவ்வளவு பிசியாக இருக்கும் கமல் வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கு எப்போது நேரம் ஒதுக்குவார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .