நியூயார்க்

முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவதை நிறுத்தி விட்டு அரசை நடத்துவதை கவனிக்க வேண்டும் என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார்.

சி என் என் தொலைக்காட்சி ஆண்டர்சன் 360 என்னும் நிகழ்ச்சையை நடத்தி வருகிறது,  இதில் முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் புளும்பெர்க் கலந்துக் கொண்டார்.

அந்த நிகழ்வில் மைக்கேல் கூறியதாவது

“ட்ரம்ப், தனது அரசின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்படாமல், தனது டிவிட்டர் பதிவுகளிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.  அதை நிறுத்தி விட்டு அவர் அரசின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும்.  ட்ரம்ப் நல்ல மனிதர்தான், ஆனால்  அதிபர் பதவிக்கு தகுந்தவர் அல்ல, அதனால் நான் எனது வாக்கை அவருக்கு அளிக்கவில்லை.   அவர் எடுக்கும் பல முடிவுகள் புத்திசாலித்தனமானதாக இல்லை.  அமெரிக்காவை மீண்டும் பிரம்மாண்டம் ஆக்குவோம் என்ன ட்ரம்ப் கூறும் வார்த்தைக்கே அர்த்தம் இல்லை.  மீண்டும் என அவர் எதைக் குறிக்கிறார் என அனேகமாக அவருக்கே தெரிந்திருக்காது.   மாற்றங்களை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் ட்ரம்ப்புக்கு வந்தால்தான் அமெரிக்க நாட்டுக்கு மாற்றங்கள் வரும்”

இவ்வாறு மைக்கேல் கூறி உள்ளார்