சபரிமலை போராட்டம் : பெண் செய்தியாளர் வழியில் இருந்து திரும்பினார்.

பரிமலை

பரிமலையில் எழுந்த போராட்டம் காரணமாக நியூயார்க் டைம்ஸ் பெண் செய்தியாளர் சுகாசினி ராஜ் பாதியில் திரும்பினார்.

சபரிமலையில் நூறாண்டு காலங்களாக இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இளம்பெண்களுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் கடுமையான போராட்டம் நடந்து வருகிறது.

பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வாகனங்களை தடுத்து இளம்பெண்களை திருப்பி அனுப்பியதால் போலீஸ் பக்தர்கள் மீது தடியடி நடத்தி பலர் காயமுற்றதாக செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட சில இடங்களில் இந்த தடை வரும் 22 ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

காவல்துறையினர் பெண்களுக்கு பாதுகாபு அளித்து சபரிமலைக்கு அழைத்துச் செல்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நீயூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் சுகாசினி ராஜ் தன்னுடன் பணி புரிபவருடன் சபரிமலைக்கு சென்றார். இவரை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அதனால் அங்கு காவல்துறையினர் குவிந்தனர்.

காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை பயணத்தை தொடங்கிய சுகாசினி ராஜ்க்கு மேலும் எதிர்ப்பு கிளம்பியது. பக்தர்கள் மரக்கூட்டம் பகுதியில் அவரை சூழ்ந்து திரும்பிச் செல்லுமாறு கோஷமிட்டனர். நிலைமை மோசமடையவே சுகாசினி ராஜ் தனது சக ஊழியருடன் கிழே இறங்கி பம்பைக்கு திரும்பினார்.

செய்தியாளர்களிடம் சுகாசினி ராஜ், “நான் பொதுமக்களின் உணர்வுகளை காயபடுத்த விரும்பாததால் எனது பயணத்தை பாதியில் நிறுத்தி கொள்கிறேன்” என தெரிவித்தார். காவல்துறையினர் தாம் பாதுகாப்பு அளிக்க தயாராக இருந்ததாகவும் சுகாசினி அவராகவே திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.