ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில், முதல் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முதல் 4 பேட்ஸ்மென்கள் சொதப்பினர். ஷதாப் கான் 42 ரன்களை அடிக்க, ஃபஹீம் அஷ்ரப் 31 ரன்களையும், இமாத் வாஸிம் 19 ரன்களையும் அடித்தனர்.

இறுதியில், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்தின் ஜேகப் டஃபி 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர், சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டிம் ஷெஃபர்ட் 57 ரன்கள் அடிக்க, கிளென் பிலிப்ஸ் 23 ரன்களும், மார்க் சேப்மன் 34 ரன்களையும் அடித்தனர்.

இறுதியில், 18.5 ஓவர்களிலேயே, 5 விக்கெட்டுகள் மட்டும் இழந்த நியூசிலாந்து 156 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம், இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது அந்த அணி.