கேன் வில்லியம்சன் அதகளம் – முழு வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றியை நோக்கி விரைவாக நகர்கிறது நியூசிலாந்து அணி. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலையில் உள்ளது பாகிஸ்தான் அணி.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 297 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கேப்டன் கேன் வில்லியம்சன் 238 ரன்களை அடித்து மிரள விட்டார்.

ஹென்றி நிக்கோலஸ் தன் பங்கிற்கு 157 ரன்களை அடிக்க, டேரில் மிட்செல்லும் 102 ரன்களை அடித்து கைகொடுக்க, மொத்தம் 659 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, 362 ரன்களைக் கூடுதலாகப் பெற்ற நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது அந்த அணி.

இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், குறைந்தபட்சம் 362 ரன்கள் எடுத்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற நிலையில், களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 3 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளது. டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் என்பதே கள நிலவரமாக உள்ளது.