வெலிங்டன்: நியூசிலாந்து ஹாக்கித் தொடரில் இந்திய மகளிர் அணி, தனது முதல் போட்டியில் வென்று, தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

நியூசிலாந்து டெவலப்மென்ட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இந்த வெற்றியைப் பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி.

நியூசிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ‘நியூசிலாந்து டெவலப்மென்ட்’ எதிர்த்து நடைபெற்றது.

இப்போட்டியின் துவக்கம் முதலே புயலென செயல்பட்ட இந்திய வீராங்கணைகளிடம், சொந்த நாட்டில் விளையாடும் நியூசிலாந்து அணியினர், ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். முடிவில், 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் 2 கோல்கள் அடித்தார். இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில், ‘நியூசிலாந்து சீனியர்’ அணியை எதிர்கொள்கிறது.