லார்ட்ஸ்: 2019ம் உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்துடன் மோதும் நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்துள்ளது.

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

தொடக்கத்திலிருந்தே நியூசிலாந்து அணி மிகவும் நிதானமாகவே ஆடிவந்தது. தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் மீண்டும் ஏமாற்றினார். அவர் 19 ரன்களில் அவுட்டானார். பெரிதாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வில்லியம்ஸன் 30 ரன்களில் அவுட்டானார்.

நிக்கோலிஸ் 55 ரன்களை எடுத்தார். ராஸ் டெய்லரும் 15 ரன்களில் அவுட்டாகி சொதப்பினார். டாம் லாதம் 47 ரன்களை எடுக்க, நீஷம் 19 ரன்களும், கிரான்ட்ஹோம் 16 ரன்களும் எடுத்தனர்.

முடிவில், நியூலாந்து அணி, 8 விக்கெட்டுகளை இழந்து, 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கான இலக்காக 242 ரன்களை நிர்ணயித்தது.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மற்றும் பிளங்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் பலமானது என்பதால், போட்டி எப்படி மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.