லண்டன்: இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி, ரன்கள் எடுக்க திணறி வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பிட்ச் மிகவும் மெதுவானது என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணி பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பதோ வேறாக இருக்கிறது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், நியூசிலாந்து அணி திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோலஸ் 28 ரன்னில் ஆட்டமிழக்க, முக்கிய பேட்ஸ்மேன் கேப்டன் கேன் வில்லியம்ஸன் மட்டுமே அரைசதம் அடித்தார். அவர் 95 பந்துகளை சந்தித்து வெறும் 67 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ராஸ் டெய்லர் ரன்களை எடுக்கத் திணறி வருகிறார். அவருடன் நீஷம் இணைந்துள்ளார். தற்போதை நிலவரப்படி, 38 ஓவர்களை சந்தித்து, வெறும் 145 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.