நியூசிலாந்து அணிக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்ததாம்! – மெக்கெல்லம் கூறுவது எதை?

துபாய்: கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில், நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் சிறிதளவு அதிர்ஷ்டம் இருந்தது என்று தான் எண்ணுவதாக கூறியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்கெல்லம்.

அதேசமயம், இக்காலகட்டம் அந்த அணிக்கு முக்கியமானது என்றும், வேறு ஒரு சிறந்த சாதனையை நிகழ்த்துவதற்கு அந்த அணி இப்போதே திட்டமிட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

“கடந்தமுறை உலகக்கோப்பைக்கு மிக அருகில் சென்றனர் நியூசிலாந்து அணியினர். ஆனால், அந்த நிலையை அடைந்ததில், அவர்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்ததாக நான் கருதுகிறேன். சிறப்பான ஒன்றை செய்யும் நிலையை கிட்டத்தட்ட அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

கேன் வில்லியம்சனின் தலைமைத்துவம் மற்றும் வேறுசில சீனியர் வீரர்களின் ஆலோசனைகள் இதற்கு துணையாய் இருக்கின்றன. அதேசமயம், இது அவர்களுக்கு சீரிய திட்டமிடலுக்கான நேரம்.

தற்போது அவர்களுக்கு நியூலாந்தில் மட்டுமல்ல; உலகெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றுள்ளார் மெக்கெல்லம்.