நியுஜிலாந்து

ந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து  பயணிகள் வரத் தற்காலிக  தடை விதித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாகி வருகிறது.  நேற்று ஒரே நாளில் 1,26,265 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 684 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,29,26,061 பேர் பாதிக்கப்பட்டு 1,66,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதையொட்டி நியுஜிலாந்து நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.  அதன்படி இந்தியாவில் இருந்து நியுஜிலாந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை நியுஜிலாந்து நாட்டுக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தற்காலிக தடை வரும் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 28 வரை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.