டில்லி:

பிரதமர் மோடி தலைமையில் வரும் 12ந்தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அமைச்சர் மோடி தலைமையில், கடந்த மே மாதம் 30ந்தேதி  பதவி ஏற்றது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

(பைல் படம்)

இந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் அனைவருக்கும் இலாகாகக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 12ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் மீண்டும்  நடைபெற உள்ளது. இதில்,  அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள்,  சிறு மற்றும் குறு விவசாயி களுக்கான திட்டங்கள் .

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் 57 பேர் பங்கேற்கும் முழு அமைச்சரவை கூட்டம் வரும் 12ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க 57  மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

12ம் தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி தொடங்க உள்ளது.. இந்த கூட்டத்தொடரில் நாட்டின் முழு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.  இந்த கூட்டத்திதொடரில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.