சென்னை:

அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது முறையாக பிரதமராகும் மோடிக்கு வாழ்த்துகள். பாஜக வெற்றிச் செய்திகள் மட்டுமே அலை பாய்ந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் வேறு செய்திகளும் கவலையையும் அதிர்ச்சியையும் தருகின்றன.

மத்திய பிரதேச மாநிலம் சியோனி நகரில் ஒரு பெண் உட்பட 3 இஸ்லாமியர்களை பசு மாட்டுக் கறி எடுத்துச் சென்றார்கள் என்று கூறி மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த திங்களன்று குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள கோயிலில் பட்டியல் இனத்தவரின் திருமணம் நடத்த உயர் சாதியினர் தடை விதித்திருப்பதாக முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த இரு சம்பங்களிலும் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த வன்கொடுமைகள் நரேந்திர மோடி ஆட்சியின் அடுத்த 5 ஆண்டுகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.