அடுத்த சர்ச்சை: பதில் சொல்வாரா தலைமறைவு “சர்கார்” எழுத்தாளர் ஜெயமோகன்?: நெட்டிசன்கள் கேள்வி

“தேங்காய் தங்கிறவன் ஒருத்தன்.. அதுக்கு தெண்டங்கட்டுவறவன் ஒருத்தன்”னு ஊர்ல  ஒரு பழமொழி சொல்லுவாங்க.. அப்படித்தான் ஆகிப்போச்சு  வசனகர்த்தா ஜெயமோகன்  கதையும்!

“பெரிய அப்பாடக்கர் எழுத்தாளரு, ஆஹான்.. ச்சே, ஆசான்” அப்படின்னெல்லாம் சில  பேருகொண்டாடுறாங்க. வேற சில பேரோ.. அவரு எழுதினதுல இந்தந்த தப்பு இருக்குன்னு பட்டியல் போட்டு காய்ச்சி எடுக்கிறாங்க…

சரி.. அதெல்லாம் எலக்கிய சமாச்சாரம்.. நமக்கு ஆவாது.

சினிமா மேட்டருக்கு வருவோம்.

சர்கார் படத்து கதைய வருண் ராஜேந்திிரன் அப்படிங்கிறவர்கிட்டே இருந்து  ஏ.ஆர். முருகதாஸ் திருடிட்டார்னு ஊரே சிரிக்குது. ஆனா நம்ம ஜெயமோகன், “அதெல்லாம் இல்ல.. இந்தக் கதை முருகதாசோடதுதான்.. ஒரு மண்டலம் உக்காந்து செதுக்கினோம்டனு பேட்டி கொடுது மாட்டிக்கிட்டாரு. அதோட, “இந்த  விவகாரத்தை வச்சு ஒரு நாவலே எழுதப்போறேன்”னு புதுசா நாட் பிடிச்ச மாதிரி பேசுனாரு.

இப்போ ஆளாளுக்கு ஜெயமோகனை தேடுறாங்க.. மனுசன் செல்போனு, கம்ப்யுட்டர் எல்லாததையும் ஏறக்கட்டிட்டு ஆஃப் லைன்ல போயிட்டாரு.

ஒலகத்துல நடந்த, நடக்கிற விசயத்துக்கு மட்டுமிில்ல.. நடக்காத விசயத்துக்கெல்லாம்கூட கருத்து சொல்ற மனுசன்.. இப்போ  விரல வச்சுக்கிட்டு என்ன பண்றாரோன்னு பாவமா இருக்கு.

ஜெயமோகன்

அதுக்குள்ள இன்னொரு சர்ச்சை கிளம்பிடுச்சு.

முருகதாசுக்கு வக்காலத்து வாங்கி பேசினாருல்ல ஜெயமோகன்.. அப்போ, “மலையாளத்துல `பூமியிலே ராஜாக்கன்மார்’ னு ஒரு படம் வந்துச்சு. அந்தப் படத்துல இன்ஸ்பயரு ஆகி, அதே கருவ வச்சி  தெலுங்குல   ‘லீடர்’னு ஒரு  படம் எடுத்தாங்க.. .  அந்த லீடர் பட கருவை கொஞ்சம் மாத்தி  தமிழ்ல  ‘வெட்டாட்டம்’னு ஒரு நாவல் வந்துச்சு.. இப்போ  வெட்டாட்டம் நாவல் உரிமைய  வாங்கி  ‘நோட்டா’ னு ஒரு தமிழ்ப் படம் எடுக்கறாங்க”ன்னு ஜெயமோகன் பேசுனாரு.

இப்போ அதுதான் சர்ச்சைய கிளப்பயிருக்கு.

“வெட்டாட்டம்” நாவலை எழுதன ஷான் கருப்புசாமிதான், “நோட்டா” படத்துக்கு வசனம் எழுதறாரு.

அவரு, “நான் எந்தப் படத்தையும் காப்பி அடிச்சு வெட்டாட்டம் நாவலை எழுதலை.  ஜெயமோகன் தன்னோட கருத்தை வாபஸ் வாங்கிட்டு  வருத்தம் தெரிவிக்கணும்… இல்லேன்னா அவரு மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”னு ஆக்ரோசமா தன்னோட முகநூல் பக்கத்துல பதிவு போட்டிருக்காரு. அவருகிட்ட பேசினேன். அவரு, “வெட்டாட்டம் நாவலை ஜெயமோகனுக்கு பதிப்பகத்தார் அனுப்பியிருக்காங்க. அவரும் அதைப் படிச்சுட்டுத்தான் அப்படி பேசியிருக்காருன்னு நம்பறேன். அந்த புத்தகத்திலேயே தொடர்பு தொலைபேசி எண்  இருக்கு. சக எழுத்தாளரோட கதை பத்தி இப்படி ஒரு  கருத்து இருக்குன்னா, மீடியாவுல பேசறதுக்கு முன்னால என்கிட்ட பேசி ஜெயமோகன் உறுதிப்படுத்தியிருக்கலாம். ஆனா வேணும்னே அப்படி பேசியிருக்காரு. அவரு வருத்தம் தெரிவிக்காட்டி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்போறது உறுதி”ன்னு சொன்னாரு.

ஷான் கருப்புசாமி

திருட்டு புகாருக்கு ஆளான ஏ.ஆர். முருகதாஸ் “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் நான்தான்”னு மறுபடி கெத்தா ஒரு வீடியோ விட்டுட்டு,  காஞ்சி காமாட்சி கோயிலுக்கு ஹாய்யா போயி போஸ்கொடுத்து.. அந்தப்படம் பேஸ்புக், ட்விட்ர்ல உலவ ஆரம்பிச்சு நாளாச்சு.

“முருகதாஸ சப்போர்ட் பண்றேன் பேர்வழின்னு ஏதேதோ பேசி இப்ப வசமா சிக்கயிருக்காரு ஜெயமோகன். இப்பவாவது தன்னோட தலைமறைவு வாழ்க்கையை முடிச்சுக்கிட்டு வந்து விளக்கம் சொல்லட்டும்”னு சமூகவலைதளத்துல பலரும் எழுத ஆரம்பிச்சிருக்காங்க.

ஆசானே.. வந்து பேசு ஆசானே!

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: next Controversy  : is under cover sarkar writer jayamohan tell reply: asked netizens, அடுத்த சர்ச்சை: பதில் சொல்வாரா தலைமறைவு “சர்கார்” எழுத்தாளர் ஜெயமோகன்?: நெட்டிசன்கள் கேள்வி
-=-