அடுத்த தீபாவளி அயோத்தி ராமர் கோவிலில் கொண்டாடப்படும்…சுப்ரமணியன் சாமி

டில்லி:

அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். பக்தர்கள் அடுத்த ஆண்டு தீபாவளியை அங்கு கொண்டாடலாம். புதிதாக கட்டப்படும் ராமர் கோவிலில் அடுத்த தீபாவளி கொண்டாடப்படும். எல்லாம் தயாராகிவிட்டது. சுவாமி நாராயண் கோவிலை போன்று உள்கட்டமைப்பை மட்டும் பொருத்தினால் கோவில் தயாராகிவிடும்.

நரசிம்மராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில் அங்கு கோவில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கோவிலை கட்டுவதற்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது. இந்த விவகாரத்தில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்’’ என்றார்.