அடுத்த பிரதமர் ‘ராகுல்காந்தி’: கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை:

ற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றால் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரதமராக வர வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ற்போதைய மோடி அரசின் பதவி  காலம் அடுத்த ஆண்டு (2019) மே மாதம் முடிய உள்ளது. இதற்கிடையில், முன்கூட்டியே தேர்தல் என்றும், சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று  என பல்வேறு வியூங்களும், அரசியல் கருத்துக்களும் பரவி வருகின்றன.

ஆனால், பாஜ தலைவர் அமித்ஷாவோ,  2019 ம் வருட பாராளுமன்ற தேர்தல் முன் கூட்டி நடத்தப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். அதற்கேற்றார்போல, மீண்டும் பாஜ  தலைமையிலான மத்திய அரசை நிறுவ மாநிலந்தோறும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு, பாஜகவினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, இந்த 4 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள், பெண்கள் மீதான தாக்குதல் கள், சிறுபான்மையினர், தலித்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்களி டையே பாஜகமீது அதிருப்தி நிலவி வருகிறது.

மேலும், பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, நீட் தேர்வு போன்ற கொள்கைகளில் மத்திய அரசு மீது மக்களின் அதிருப்தி போன்ற பல அதிர்ச்சிகரமான தகவலை பொதுமக்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதேவேளையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்த வியூங்களை வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தந்திடிவி கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப் பில்  மோடி அரசின் நிர்வாகம், வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப்பபோது யார் என்பது குறித்து வினா எழுப்பியது.

இந்த பிரமாண்ட கருத்துக்கணிப்பில் பாஜக மீது அதிருப்தி நிலவி வருவது தெளிவாகி உள்ளது.

அடுத்த பிரதமர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள்…? என்ற கேளவிக்கு ராகுல்காந்திக்கு 36 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது மோடியை விட12 சதவிகிதம் அதிகமாகும். அதுபோல   பாஜ அரசின் செயல்பாட்டை விட காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகளே சிறப்பு என்பதும் தெரிய வந்துள்ளது.

அடுத்த பிரதமர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள்…?

ராகுல் காந்தி – 36%

நரேந்திர மோடி – 24%

3வது முகம் – 40%

எந்த அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது..?

காங். கூட்டணி – 36%

பாஜக கூட்டணி – 27 %

இரண்டும் இல்லை – 37%

மோடி அரசு பற்றிய உங்கள் கருத்து…

எல்லோருக்குமானது – 12%

வழக்கமான அரசு – 26%

கார்ப்பரேட்களுக்கானது – 63%