ரியோடிஜெனிரா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கு, தென்அமெரிக்க அளவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியொன்றில், பெருவை வென்றது பிரேசில் அணி.
பிரேசில்-பெரு அணிகள் மோதிய போட்டியில், பிரேசிலின் ஸ்டார் வீரர் நெய்மர், ஹாட்ரிக் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த அணியின் ரிச்சர்லிசனும் 64வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.
அதேசமயம், பெரு அணியில் காரில்லோ மற்றும் டபியா ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். இறுதியில், பிரேசில் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகளில், அர்ஜெண்டினா அணி, பொலிவிய அணியை 2-1 என்ற கணக்கிலும், ஈக்குவடார் அணி 4-2 என்ற கணக்கில் உருகுவே அணியையும் தோற்கடித்தன.