லிஸ்பன்: தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பிரேசிலின் நெய்மர் இடம்பெற்றிருக்கும் பாரிஸ்-செயின்ட்-ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இது பிரான்ஸ் அணியாகும்.

அரையிறுதியில், ஆர்.பி. லீப்ஜிக் என்ற அணியை எதிர்த்து ஆடி, அதை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி அணி.

தற்போது சாம்பியன்ஸ் லீக் கால்பந்தின் 65வது சீசன் நடந்து வருகிறது. இத்தொடரில், இறுதிப் போட்டிக்குள் பிஎஸ்ஜி அணி முதன்முதலாக நுழைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம், கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதிக்கு முன்னேறிய ஒரு பிரான்ஸ் அணி என்ற பெருமையை பெற்றது பிஎஸ்ஜி அணி.