நெய்வேலி:
டலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் ஒன்று இன்று காலை வெடித்து சிறதறியது. இதனால், அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நெய்வேலியில் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்ததால், அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முதல்கட்ட தகவலின்படி இரண்டாவது அனல் மின் நிலையம் ஆறாவது யூனிட்டில் பணிபுரிகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் ஆறு பேர் பலத்த காயம் நிரந்தரத் தொழிலாளி ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது
இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 
தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டத்துடன் சூழப்பட்டுள்ளது.
பற்றி எரியும் நெய்வேலி அனல்மின் நிலையம்..