யு சான்றிதழ் பெற்ற சூர்யாவின் ‘என்.ஜி.கே.’….!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து , ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடும் பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘என்.ஜி.கே. படத்துக்கு, தணிக்கை வாரியம் யு சான்றிதழ் கொடுத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கென ட்விட்டர் எமோஜி, கேரளாவில் பெண் ரசிகைகளுக்கு தனி ஷோ என சிறப்புகள் கூடி கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தணிக்கைக்குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: NGK, surya, U certificate
-=-