டில்லி

மர்நாத் கோவிலில் மந்திரங்கள் ஓதவும், மணி ஒசை எழுப்பவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனிதத் தலங்களில் அமர்நாத் கோவிலும் ஒன்றாகும்.  இங்கு யாத்திரை செய்யும் மக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் விதிமுறைகளை செய்து தருமாறு மாநில நிர்வாகத்துக்கு  உச்சநீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.   அதை ஒட்டி ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி அந்தக் குழு செயல்பட்டு வருகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்போது சில விதிகளை வெளியிட்டுள்ளது.  அதன்படி அமர்நாத் கோவிலில் மணி ஓசை எழுப்ப தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.   ”பக்தர்கள் தங்களது மொபைல் உட்பட அனைத்துப் பொருட்களையும் கோவிலுக்கு முன் உள்ள கடைசி செக் போஸ்டில் கொடுத்து விட்டு செல்ல வேண்டும்.   பக்தர்களின் பொருட்களை பத்திரமாக வைக்க தனி அறை ஒன்று அமைக்க வேண்டும்.

யாத்திரிகர்கள் எந்த ஒரு மந்திரத்தையும் ஜெபிக்கக் கூடாது.  ஜெய கோஷங்கள் போடக் கூடாது.  அவ்வாறு செய்பவர்களை கோவிலுக்கு செல்வதில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.   கடைசி செக் போஸ்டில் இருந்து கோயில் வரை ஒருவர் பின் ஒருவராக வரிசையில் அனுப்ப வேண்டும்.” என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.