வன நிலங்களை சட்ட விரோதமாக வாங்கிய காவல் அதிகாரிக்கு 46 லட்சம் அபராதம்

டில்லி

ன நிலங்களை சட்ட விரோதமாக வாங்கிய உத்தரகாண்ட் டிஜிபிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 46 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தில் முசோரி மலைப் பகுதியில் வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் அம்மாநில காவல்துறை அதிகாரி (டிஜிபி)  பி எஸ் சித்துவால் சட்ட விரோதமாக நிலம் வாங்கப்பட்டுள்ளது.  அத்துடன் அங்கிருந்த மிகப்பழமையான 25 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.   இது வனப்பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராகும்.

இதனால் சித்து மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.   இந்த வழக்கை நீதிபதி ராதோட் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.   அந்த தீர்ப்பில், “காவல்துறை அதிகாரி சித்து வனப்பகுதி என தெரிந்தே சட்ட விரோதமாக அங்கு நிலங்களை வாங்கி உள்ளார்.   அந்த நிலத்தின் நடுவே ஒரு பண்ணை வீடு கட்ட சுமார் 25 பழமையான மரங்களை வெட்டி உள்ளார்.   இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.

இவ்வாறு குற்றம் செய்தவர் அதற்கான இழப்பீட்டை அளித்தாக வேண்டும்.    மேலும் அந்த சம்பவம் நடந்த போது அவர் காவல்துறையில் டிஜிபியாக பணி புரிந்துள்ளார்.  எனவே இது அதிகார துஷ்பிரயோகம் எனவும் கூறலாம்.  அதனால் அவருக்கு இந்த நீதிமன்றம் ரூ. 46,14,960 அபராதம் விதித்துள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.